கோ ஆர் எச் - 2 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோஆர்எச்-2
CORH-2
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐஆர்-58025-ஏ x சி-20-ஆர்
வகை
புதிய நெல் வகை
காலம்
120 - 125 நாட்கள்
மகசூல்
6100 கிலோ ஒரு எக்டேருக்கு
வெளியீடு
1998
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
மாநிலம்
தமிழ்நாடு
நாடு
 இந்தியா

கோ ஆர் எச் 2 (CORH 2) என்பது வீரியம் மிகுந்த ஒட்டு நெல் வகையாகும். ஐ. ஆர். 58025 ஏ (IR 58025 A) என்ற ஆண் மலட்டுத்தன்மை கொண்ட பெண் இரகத்தையும், சி 20 ஆர் (C 20 R) என்ற ஆண் இரகத்தையும் இயற்கை முறையில் ஒட்டச் சேர்த்து கிடைக்கப்பெறும் நெல் வகையான இது,[1] 125 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் குறுகியகால நெல் வகையாகும்.[2]

மகசூல்[தொகு]

1000 தானிய நெல்மணிகளின் எடை 23.77 கிராம் உள்ள இது, ஒரு எக்டேருக்கு சராசரியாக 6100 கிலோ மகசூலாக தரக்கூடியதாகும். நடுத்தரத் தானிய அமைப்புடைய இந்நெல் இரகம், நடுத்தரக் குட்டைத் தன்மைகொண்ட நெற்பயிராகவும், மற்றும் உயர் விளைச்சல் தரும் சிறப்பு இரகமாகவும் கருதப்படுகிறது.[2]

அறிமுகம்[தொகு]

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் 1998 ஆம் ஆண்டு கண்டறிந்து வெளியிடப்பட்ட இந்த கோ ஆர் எச் 2 நெல் இரகத்தின்,[3] அரிசி, வெண்ணிறமுடையதாகும்.[2]

இவற்றையும் காண்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "IMPORTANT RICE VARIETIES SUITABLE FOR TAMIL NADU" (PDF). 2017-03-29 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-03-07 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
  3. Hybrid Rice - Rice hybrids released in India
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ_ஆர்_எச்_-_2_(நெல்)&oldid=3551926" இருந்து மீள்விக்கப்பட்டது