உள்ளடக்கத்துக்குச் செல்

கைவரி சம்பா (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைவரி சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
135 – 140 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 1350 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

கைவரி சம்பா அல்லது கைவர சம்பா (Kaivari Samba or Kaivara Samba, Meaning: Hand Stripes)[1] என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். இதன் தானியமணியின் மேற்புறத்தில் காணப்படும் வரிகள் (கோடுகள்) மனித கைகளில் உள்ள வரிகளுடன் (ரேகை) ஒப்பிட்டும், மேலும் பனைமரத்தின் கழித்துண்டுகளிலுள்ள நாராலான கோடுகளுடன் ஒப்பிட்டும் இந்நெல்லின் பெயர் சூட்டப்பட்டதாக மூலங்களில் கூறப்பட்டுள்ளது.[2]

இயற்கையாகவே குட்டையாகவும் தடித்தும் உள்ள இந்நெல்லின் சோறு, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என நம்பப்படுகிறது. 135 - 140 நாட்களில் அறுவடைக்கு தயாராகக்கூடிய இந்த நெல்வகை, 15 - 18 பைகள் வரை மகசூல் கிடைப்பதாக கருதப்படுகிறது.[3]

சுமார் 150 செமீ உயரத்திற்கு வளரும் தன்மையுடைய இதன் நெற்பயிர், களிமண் நிலங்களில் பயிரிட முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இட்லி, தோசை, மற்றும் இடியாப்பம் போன்ற சிற்றுண்டி வகைகள் தயாரிக்க ஏற்றதாக கருதப்படும் தட்டையான இந்த நெல் இரகம், கைக்குத்தல் அரிசியில் சுவையான அவல் உருவாக்க உகந்தது. நீர்த்தேக்கம், மற்றும் வெள்ளம் சூழ்ந்த சூழ்நிலையிலும் தாங்கிநிற்கும் தன்மைகொண்ட இதன் நெற்பயிர்கள், பூச்சிகள் மற்றும் நோய்களிருந்தும் தற்காத்து வளரும் திறனுடையதாக சொல்லப்படுகிறது.[2]

சான்றுகள்[தொகு]

  1. Page: 12 Naming traditional rice varieties
  2. 2.0 2.1 "Traditional Varieties Kaivari Samba". nammanellu.com (ஆங்கிலம்) - 2018 - 19. பார்க்கப்பட்ட நாள் 2019-04-19.
  3. Traditional Rice Varieties - Kaivara Samba "Traditional Varieties Kaivari Samba". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2015 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2019-04-20. {{cite web}}: Check |url= value (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைவரி_சம்பா_(நெல்)&oldid=3722402" இலிருந்து மீள்விக்கப்பட்டது