உள்ளடக்கத்துக்குச் செல்

ஓ ஆர் - 10 - 112 (குமார்) (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓஆர்-10 - 112
OR-10-112
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
டி - 90 x ஐஆர்-8
வகை
புதிய நெல் வகை
காலம்
120 - 125 நாட்கள்
வெளியீடு
1975
மாநிலம்
ஒரிசா
நாடு
 இந்தியா

ஓ ஆர் - 10 - 112 (குமார்) (OR-10-112 (Kumar) எனப்படும் இது; 1975 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, சற்றே ஏறக்குறைய குறுகியகால நெல் வகையாகும்.[1] 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டி - 90 (T-90) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 (IR-8) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். கடலோர உவர்ப்பு நிலப் பகுதிகளில் நன்கு வளரத்தக்க இந்த நெற்பயிர், 80 சென்டிமீட்டர் (80 cm) குள்ளப் பயிராகும். மிதமான, மற்றும் தடித்த தானியத்தை கொண்டுள்ள இவ்வகை நெற்பயிர், ஒரிசா மாநில கடலோரப் பிராந்தியங்களில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]

குறிப்பு

[தொகு]

ஓ ஆர் - 10 - 112 இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் நெல் வகையாகும்.[3]

சான்றுகள்

[தொகு]
  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Details of Rice Varieties : Page 1 - 29. OR-10-112 (Kumar)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-05.
  3. Notified Rice Varieties in Orissa, India
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ_ஆர்_-_10_-_112_(குமார்)_(நெல்)&oldid=3237387" இலிருந்து மீள்விக்கப்பட்டது