ஆடுதுறை - 15 (நெல்)
| ஆடுதுறை - 15 ADT 15 |
|---|
| வேளாண் பெயர் |
| செங்குறுவை |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| ஏடிடீ-4 சடுதிமாற்றம் |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 110 - 115 நாட்கள் |
| மகசூல் |
| 4200 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 1937 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
ஏ டி டீ - 15 (ADT 15) (வட்டார வழக்கு செங்குறுவை (Senkuruvai) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஏ டி டீ - 4 நெல் இரகத்திலிருந்து சடுதிமாற்றம் (Mutantion) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
வெளியீடு
[தொகு]தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1937 ஆம் ஆண்டு, இந்த நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]
காலம்
[தொகு]குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 105 - 110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற குறைந்த கால நெற்பயிர்கள், குறுவை பட்டத்திற்கு (பருவம்) ஏற்றதாக கூறப்படுகிறது.[1]
சாகுபடி
[தொகு]குட்டையாகவும் மற்றும் தடித்தும் காணப்படும் இதன் தானிய மணிகள், ஒரு எக்டேருக்கு சுமார் 4200 கிலோவரை மகசூல் தரக்கூடியது.[1] தஞ்சை, திருச்சி மற்றும் செங்கை போன்ற மாவட்டங்களில் அதிக விளைச்சல் தரும் இந்த நெற்பயிர்கள், நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் பரவலாக சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது.[2]
குறிப்புகள்
[தொகு]- வெண்ணிற அரிசியுடைய நெல் இரகம்.
- தூர் அழுகல் நோயை எதிர்க்கும் திறன்கொண்டது.[1]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. Retrieved 2017-08-13.
- ↑ 2.0 2.1 "Rice Knowledge Management Portal ADT 15". www.rkmp.co.in (ஆங்கிலம்) - 2011. Archived from the original on 2019-04-23. Retrieved 2019-04-23.
{{cite web}}: Unknown parameter|dead-url=ignored (help)