புழுதிக்கார் (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புழுதிக்கார்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
125 – 130 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 1500 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா[1]

புழுதிக்கார் ( Puzhuthikar) (நெல் குறியீடு: G. Tj. D. I. (Tj என்பதன் பொருள் தஞ்சாவூர் பயன்பாடு [2]) பாரம்பரிய நெல் வகைகளின் வரிசையில் இடம்பெற்றுள்ள இது, மழை நீரை மட்டுமே நம்பியுள்ள புன்செய் நிலத்திற்கு ஏற்ற இரகமாகும். தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள மேற்கு மலைத் தொடர் பிராந்தியங்களில் அமைந்துள்ள, மானாவாரி மற்றும் இறவை நிலப் பகுதிகளில் செழித்து வளரக்கூடியதாகும்.

நேரடி நெல் விதைப்பு முறைக்கு ஏற்ற இரகமான புழுதிக்கார், கதிர்கள் மூப்படையும் காலத்தில் எளிதில் சாயும் தன்மையுடையது. சராசரியாக 130 சென்டிமீட்டர்கள் வளரக்கூடிய இதன் நெற்பயிர்கள், 120 - 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. சிவப்பு நிறத்துடன் கூடிய தடித்த (மோட்டா) நெல் இரகமாக உள்ள இது, ஒரு ஏக்கருக்கு 1.5 டன்கள் அளவிற்கு மகசூல் தரக்கூடியது.[3]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புழுதிக்கார்_(நெல்)&oldid=3722428" இருந்து மீள்விக்கப்பட்டது