கோ ஆர் எச் - 3 (நெல்)
கோஆர்எச்-3 CORH-3 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
சிஎம்எஸ்-2-ஏ x சிபி-87-ஆர் |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
110 - 115 நாட்கள் |
மகசூல் |
6000 கிலோ ஒரு எக்டேருக்கு |
வெளியீடு |
2006 |
வெளியீட்டு நிறுவனம் |
TNAU, கோவை |
மாநிலம் |
தமிழ்நாடு |
நாடு |
![]() |
கோ ஆர் எச் 3 (CORH 3) என்பது; வீரியம் மிகுந்த புதிய ஒட்டு இரக நெல் வகையாகும். டிஎன்ஏயு சிஎம்எஸ் 2ஏ (TNAU CMS 2A) என்ற நெல் இரகத்தையும், சிபி 87ஆர் (CB 87R) என்ற நெல் இரகத்தையும் இயற்கை முறையில் ஒட்டுச் சேர்த்துக் கிடைக்கப்பெறும் நெல் வகையான இது, 110 - 115 நாட்களில் அறுவடைக்கு தயாராகக்கூடிய குறுகியகால நெல் வகையாகும்.[1] ஒரு எக்டேருக்கு சுமார் 6000 கிலோ வரையில் மகசூலை ஈட்டக்கூடிய இந்த நெல் இரகம், நடுத்தரத் தானிய அமைப்புடன்கூடிய வெண்ணிற அரிசியை கொண்டதாகும்.[2]
பருவக்காலம்[தொகு]
குறுகியகால நெற்பயிரான கோ ஆர் எச் 3, டிசம்பர் முதல் - சனவரி மாதம் வரையிலான "நவரைப் பட்டம்", ஏப்ரல் - மே இடையிலான சொர்ணவாரிப் பட்டம், மேலும் மே - சூன் வரையிலுள்ள "கார்ப் பட்டம்", மற்றும் சூன் - யூலையில் தொடங்கும் "குறுவைப் பட்டம் என,[3] நான்குப் பருவங்களிலும் பயிரிடப்படுவதாக கருதப்படுகிறது.[2]
பண்புகள்[தொகு]
உயர்ரக விளைச்சல் தரும் சிறப்புடைய இந்நெல் இரகம், நடுத்தரச் சன்னாமான அரிசியை உடையது. மேலும், சோற்றுக்கு ஏற்றப் பண்புகொண்ட இது, நெடுநாள் சேமிக்கும் திறனுடையது.[2]
திறன்கள்[தொகு]
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2006 இல் வெளியிடப்பட்ட, ஒரே நேரத்தில் ஒத்துப் பூக்கும் தன்மையைப் பெற்ற இதன் நெற்பயிர்கள், குலை நோய் எனும் எரிபந்த நோய், துங்குரோ நச்சுயிரி (Tungro Virus), புகையான் பூச்சி (Fulgoridae), மற்றும் "பச்சை தத்துப் பூச்சிப்" போன்றவைகளை எதிர்க்கும் திறன் படைத்தாக கூறப்படுகிறது.[2]
இவற்றையும் காண்க[தொகு]
புற இணைப்புகள்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ "CORH 3 - A Short Duration Non aromatic rice hybrid". researchgate.net (ஆங்கிலம்). © 2008-2017. 2017-03-12 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி) - ↑ 2.0 2.1 2.2 2.3 Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
- ↑ நெல் வகைப் பட்டங்கள்- கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]