சடைக்கார் (நெல்)
சடைக்கார் |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
மகசூல் |
ஏக்கருக்கு சுமார் 1200 கிலோ |
தோற்றம் |
பண்டைய நெல் இரகம் |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
சடைக்கார் (Sadaikkar) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, “ஆகாடாவலசை” (Aakadavalasai) என்னும் நாட்டுப்புறப் பகுதியில் மட்டுமே விளைவதாக கருதப்படும் இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1200 கிலோ தானிய மகசூலும், 3 டன்கள் அளவுக்கு வைக்கோலும் கிடைப்பதாக கூறப்படுகிறது.[1]
பருவகாலம்
[தொகு]பின் சம்பா அல்லது தாளடிப் பருவம் (பட்டம்) எனப்படும் செப்டம்பர் - ஒக்டோபர் மாதங்களில் விதைத்து, பிப்ரவரி - மார்ச் மாதங்களில் அறுவடைச் செய்யபடுகிறது.[1] மேலும் இப்பருவத்தை பிசாணம் என்றும் அழைக்கப்படும் இந்த பருவத்தில், மத்தியகால பயிர்கள் மற்றும் அதற்கும் மேலுள்ள நீண்டகால நெற்பயிர்களை சாகுபடி செய்ய இது ஏற்றப் பட்டமாகும்.[2]
வளருகை
[தொகு]மணற்பாங்கான நீர்ப்பிடிக்கும் நிலப்பரப்புகளில் ஏற்று வளரக்கூடிய இந்த நெல் வகைக்கு, மாதம் மும்முறை மழைப்பொழிவு தேவையென கருதப்படுகிறது. மேலும் இந்த நெற்பயிரை, இலை சுருட்டுப்புழுவைத் தவிர மற்ற பூச்சிகளோ, அல்லது நோய்களோ தாக்குவதில்லை என கூறப்படுகிறது[1]
குறிப்புகள்
[தொகு]- சடைக்கார் அரிசியில், கை, கால்களில் ஏற்படும் காயங்கள் அல்லது புண்கள் போன்றவைகளை குணமாக்கும் மருத்துவ குணம் உள்ளன.[1]
- பெரும்பாலான உள்ளூர் "கால்நடை வைத்தியர்கள்" இந்த அரிசியை சில மருத்துவ குணத்திற்காகப் பயன்படுத்துகின்றனர்.[1]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Traditional Varieties grown in Tamil nadu - Sadaikkar". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-02-09.
- ↑ பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]