உவர்முண்டான் (நெல்)
Jump to navigation
Jump to search
உவர்முண்டான் |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
![]() |
உவர்முண்டான் பாரம்பரிய நெல் இரகமான இது, உவர் தன்மைகொண்ட நிலங்களிலும் கடலோர உவர்ப்பு நிலங்களிலும் நம் முன்னோரால் சாகுபடி செய்யப்பட்ட நெல் இரகமாகும். தமிழகத்தில் பல்வேறு பாரம்பரிய நெல் இரகங்கள் பல பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும், அந்தந்தப் பகுதி மண்ணுக்கேற்ப பாரம்பரிய நெல் இரகங்களும் காலங்காலமாக சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ளன.[1]
நேரடி விதைப்பு[தொகு]
காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்லாது மற்றப் பகுதியிலும் உவர் நிலங்களில் சாகுபடி செய்யும் நெல் வகையான இது, சிவப்பு நிற நெல்லும், சிவப்பு நிற அரிசியும் உடையது. நூற்றி முப்பது நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இவ்வகை நெல், சாயும் தன்மை அற்று நான்கடிவரை வளரகூடியது. மேலும் நடவு செய்வதைவிட புழுதிப் பரப்பில் நேரடி விதைப்பு செய்வதற்கு ஏற்ற இரகமாகவும் உள்ளது.[1]
இவற்றையும் காண்க[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "நம் நெல் அறிவோம்: நேரடி விதைப்புக்கு உவர்முண்டான்". தி இந்து (தமிழ்) (© டிசம்பர் 23, 2015). பார்த்த நாள் 2016-12-23.