சூரன் குறுவை அல்லது சூரக் குறுவை (Sooran Kuruvai) பாரம்பரிய நெல் வகையைச்சார்ந்த இது, தமிழகத்தின்நாகை மாவட்டத்திலுள்ள “வெள்ளப்பழம்” மற்றும் “கீவலுார்” போன்றப் பகுதிகளில் நன்கு வளரக் கூடிய நெல் இரகமாகும். 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், 30 - 35 நாட்கள் நாற்றங்கால் கால அளவு கொண்டதாகும். சூரன் குறுவையின் நெல் தானியமணி கரும்பழுப்பு நிறமாகவும், பெரு நயத்துடனும் காணப்படும்.[1]
மத்திய, மற்றும் நீண்டகாலப் பருவங்களுக்கு ஏற்ற இரகமான சூரன் குறுவைக்கு, ஆகத்து மாதம் தொடங்கும் சம்பா பட்டமும், மற்றும் செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பட்டம் போன்ற பருவங்கள் ஏற்றதாகும். மேலும், இப்பட்டத்தில் (பருவத்தில்) தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. [2][1]