புதுவை 4 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதுவை - 4
PY 4
வேளாண் பெயர்
ஜவகர்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐ ஆர் 8 X எச் 4
வகை
புதிய நெல் வகை
காலம்
145 - 150 நாட்கள்
மகசூல்
6200 கிலோ எக்டேர்
வெளியீடு
1989
வெளியீட்டு நிறுவனம்
புதுவை வேளாண் அறிவியல் நிலையம்
மாநிலம்
புதுச்சேரி
நாடு
 இந்தியா[1]

பி ஒய்- 4 (PY 4) (வேளாண் வழக்கு ஜவகர் (Jawahar) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் 8 மற்றும் எச் 4 (IR8 / H4) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட புதுச்சேரி நெல் வகையாகும்.[2]

வெளியீடு[தொகு]

இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 1989 ஆம் ஆண்டு, இந்த நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[3]

காலம்[தொகு]

மத்திய, மற்றும் நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 145 - 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற நீண்டகால நெற்பயிர்கள், சம்பா பட்டத்திற்கு (பருவத்திற்கு) ஏற்றதாக கூறப்படுகிறது.[1][4]

சாகுபடி[தொகு]

பாசன வசதியுள்ள பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெல் வகை, இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரி, மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]

  • இந்த நெல் இரகம், ஒரு எக்டேருக்கு 6200 கிலோவரை (6, 2 t/ha) மகசூல் தரக்கூடியது.[1]
  • பழுப்பு தத்துப்பூச்சி மற்றும் இலைசுருட்டுப்புழு போன்றவற்றை எதிர்த்து வளரும் தன்மையுடையது .[2]
  • நடுத்தர வெள்ளை நிற அரிசியைக்கொண்ட நெல் இரகமாகும்.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "P.K. Krishi Vigyan Kendra Puducherry - Varieties developed and released:". www.icar-iirr.org (ஆங்கிலம்) (© 2018). பார்த்த நாள் 2018-07-06.
  2. 2.0 2.1 2.2 "PY 4". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2018-07-06.
  3. "Some of the achievements by the Kendra since its inception are -". agri.puducherry.gov.in (ஆங்கிலம்) (© 2018). பார்த்த நாள் 2018-07-06.
  4. "Variety PY4". btistnau.in (ஆங்கிலம்) (© 2018). பார்த்த நாள் 2018-07-06.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுவை_4_(நெல்)&oldid=2549940" இருந்து மீள்விக்கப்பட்டது