அம்பை - 17 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்பை - 17
ASD 17
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஏடிடீ-31, ரத்னா, ஏஎஸ்பீ-8 & ஐஆர்-8
வகை
புதிய நெல் வகை
காலம்
100 - 105 நாட்கள்
மகசூல்
5400 கிலோஎக்டேர்
வெளியீடு
1989
வெளியீட்டு நிறுவனம்
TNAU, அம்பாசமுத்திரம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

அம்பை - 17 (ASD 17) எனப்படும் இந்த நெல் வகை, ஆடுதுறை - 31, ரத்னா, ஏ எஸ் பீ - 8, மற்றும் ஐ ஆர் - 8 (ADT 31 / Rathna / ASP 8 / IR 8) என நான்கு நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

வெளியீடு[தொகு]

தமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1989 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[3]

காலம்[தொகு]

குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 100 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற குறுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[4]

சாகுபடி[தொகு]

நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 17 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]

சிறப்புப் பண்புகள்[தொகு]

  • இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 5400 கிலோவரை (5.4 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இவ்வகை, நேரடி விதைப்பு முறைக்கு மிகவும் ஏற்றது.
  • இந்நேல்லின் அரிசி, சிவப்பு நிறத்தில் குறுகிய குண்டு வடிவில் காணப்படுகிறது.
  • இந்த நெல்லை சாகுபடி செய்ய, கார், மற்றும் பின் பிசாணம் போன்ற பருவங்கள் மிகவும் உகந்தது.[1][2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-10.
  2. 2.0 2.1 2.2 "Rice Knowledge Management Portal ASD 17". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2017-08-10.
  3. CROP VARIETIES RELEASED BY THE - TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY FROM 1971 to 2003 - I. AGRICULTURE
  4. "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) (© TNAU 2017). பார்த்த நாள் 2017-08-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பை_-_17_(நெல்)&oldid=2480605" இருந்து மீள்விக்கப்பட்டது