சிகப்பு குருவிக்கார் (நெல்)
தோற்றம்
| சிகப்பு குருவிக்கார் |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| வகை |
| பாரம்பரிய நெல் வகை |
| காலம் |
| 120 – 125 நாட்கள் |
| தோற்றம் |
| பண்டைய நெல் வகை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
சிகப்பு குருவிக்கார் (Sigappu Kuruvikar) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும்.[1] மத்தியகால நெற்பயிரான இது, 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. மணற்பாங்கான மற்றும் களிமண் போன்ற நிலப்பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெல் இரகம்,[2] சம்பா, முன் சம்பா, பின் சம்பா, தாளடி, பிசாணம் மற்றும் பின் பிசாணம் போன்ற அனைத்து நெற்பருவத்திலும் பயிரிட ஏற்ற இரகமாகும்.[3]
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் வட்டத்துக்கு உட்பட்ட "பெரிய குத்தகை" எனும் பகுதியில் பிரதானமாக விளையக்கூடிய இந்த நெற்பயிர், வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதாகும்.[4]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Navdanya Community Seed Banks - Tamil Nadu seed bank" (PDF). Co-ordinated by Navdanya (ஆங்கிலம்). © 2017. Retrieved 2017-09-23.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ nammanellu - Crop Duration
- ↑ Paddy Varieties of Tamil Nadu - Medium duration varieties
- ↑ TN farmers adopt to climate change with cultivation of traditional varieties of rice