பூர்வீக தைச்சுங் - 1 (நெல்)
Appearance
பூர்வீக தைச்சுங் - 1 (Taichung Native-1) எனும் இது; 1969 - 1974 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகியகால நெல் வகையாகும் 120 -125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், குள்ள சோவ் - வு ஜென் (Dwarf Chow-wu-gen ) என்ற நெல் இரகத்தையும், சாய் - யுவான் - சுஞ்சி (Tsai-Yuan-Chunj) எனும் நெல் இரகத்தையும் இணை சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். 70 - 75 சென்டிமீட்டர் அளவுள்ள இதன் தானியமணிகள், குட்டையாகவும், தடித்தும் காணப்படுகிற இந்த நெல் வகை, இந்திய பஞ்சாப் மாநிலத்தில் அதிகளவில் வேளாண்மை செய்யப்படுகிறது.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ "Details of Rice Varieties : Page 1 - 2 - Taichung Native-1". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-03-24.