ஐ இ டி - 1136 (ஐ ஆர் - 644 - ஆர் பி - 28) (நெல்)
ஐஇடி-1136 IET-1136 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
டி (என்) 1 x ஐஆர்-8/2 x பி-589 ஏ-4-18/2 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
130 - 135 நாட்கள் |
மகசூல் |
4800 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1978 |
நாடு |
இந்தியா |
ஐ இ டி - 1136 (ஐ ஆர் - 644 - ஆர் பி - 28) (IET-1136 (IR-644-RP-28) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மத்தியகால, மற்றும் நீண்டகால நெல் வகையாகும். சூலை - ஆகத்து மாதம் வரையிலான முன்சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 130 - 145 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[1]
ஐ ஆர் - 8/2 (IR-8/2), பி 589 ஏ - 4 - 18/2 (B589A-4-18)/2), மற்றும் டி (என்) 1 (T(N)1) போன்ற மூன்று நெல் இரகங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்நெல் வகை, நடுத்தர, கடற்கரை மற்றும் செம்புரை மண் எனப்படும் , குறுமண் போன்ற நிலப்பகுதிகளில் நன்கு வளரக்கூடியது.
குட்டைப் பயிராக வளரக்கூடிய இந்த நெற்பயிரின் தானியமணிகள், நீண்டு தடித்தும், இதன் அரிசி சமைக்க தரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஒரு எக்டேருக்கு 4800 - 5100 (48-51 Q/ha) கிலோவரை மகசூல் தரவல்ல இந்நெல் இரகம், வடஇந்தியப் பகுதியான மேற்கு வங்க மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2][3]
சான்றுகள்
[தொகு]- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ IET-1136 - Notified Rice Varieties in West Bengal, India
- ↑ "Details of Rice Varieties". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-15.