ஈர்க்குச்சம்பா (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈர்க்குச்சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஈர்க்குச்சம்பா (Irkkuccampa) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.[1] சம்பா வகைகளில், உடல் பித்தத்தை இந்த ஈர்க்குச்சம்பாவின் அரிசிச்சோறு, மிகவும் சுவையுடையதாக கருதப்படுகிறது.[2]

ஈர்க்குச்சம்பா பாடல்[தொகு]

அந்தமொழி கேட்டு உத்தமி அழைத்தாளே தாதிகளை
அழகு முழிராமி அபிராமி வாருமிங்கே
திரண்ட முழியாளே திருவே நீ வாருமினி
தாதியரைத் தானழைத்து உத்தமி தானுமப்போ ஏதுசொல்வார்
ஈர்க்குச் சம்பா அரிசியதை இணை இணையாய்த் தீட்டியேதான்
[3]

அகத்தியர் குணபாடம்[தொகு]

ஈர்க்குச்சம் பாஎன் றியம்பும் அரிசியது
நார்க்குக் கதியுரிசை நல்குங்காண் – பார்க்குமிடத்
தெல்லார்க்குங் காதல் இயற்றுமற்பப் பித்தமென்பார்
வில்லாரும் பூசைகட்காம் விள்

  • பொருள்:

கடவுளுக்குப் படைப்பதற்காக வழங்கும் ஈர்க்குச்சம்பா அரிசி, நாவுக்குச் சுவையையும், பார்க்க விருப்பத்தையும் தரும். கொஞ்சம் தீக்குற்றத்தையும்(Elevate Pitham) உண்டுபண்ணும்.[4]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. பக்கம்: 130 - 131 |Traditional paddy varieties in Siddha texts and their properties [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Sat Jun 22, 2013 10:52 pm |தினம் ஒரு மருத்துவக் குறிப்பு[தொடர்பிழந்த இணைப்பு]
  3. அண்ணன்மார் சுவாமி கதை பக்கம்: 307
  4. "ஈர்க்குச்சம்பா அரிசி |சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி". 2016-04-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-20 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈர்க்குச்சம்பா_(நெல்)&oldid=3544817" இருந்து மீள்விக்கப்பட்டது