பி ஆர் - 8 (நெல்)
Appearance
பி ஆர் - 8 (BR-8) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மற்றும் மத்தியகால நெல் வகையாகும்.[1] 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், தூய்மையான கேசோர் (Kessore) எனும் நெல் வரிசையிலிருந்து பிரித்தெடுத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். நடுத்தர, மற்றும் தாழ்வான நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிரின் தானியமணிகள், நீண்டு மற்றும் தடித்து காணப்படுகிறது. 150 - 155 சென்டிமீட்டர் (150-155 cm) உயரமாக வளரக்கூடிய இந்த நெற்பயிர், ஒரு எக்டேருக்கு சுமார் 2800 கிலோ (28 Q/ha) மகசூல் தரவல்லது. பெருமளவு பூச்சிகளையும், மற்றும் நோய்களையும் எதிர்க்கும் திறன்கொண்ட இந்நெல் இரகம், கிழக்கிந்திய பகுதியான பிகார் மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Details of Rice Varieties: Page 1 - 46. BR-8". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-04-18.