காவிரி (ஐ ஈ டீ - 355) (நெல்)
Jump to navigation
Jump to search
காவிரி (ஐ ஈ டீ - 355) Cauvery IET-355 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
டீகேஎம் - 6 x டீ (என்) 1 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
100 - 105 நாட்கள் |
மகசூல் |
3500 - 5000 கிலோ எக்டேருக்கு |
வெளியீடு |
1974 |
நாடு |
![]() |
காவிரி (ஐ ஈ டீ - 355) (Cauvery (IET-355) என்பது; 1974 - 1978 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] 102 - 108 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டீ (என்) 1 (T(N)1) என்ற நெல் இரகத்தையும், டீ கே எம் - 6 (TKM-6) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். புன்செய் எனப்படும் மானாவாரி அல்லது மேட்டுநிலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இது, 86 சென்டிமீட்டர் (86 cm) குள்ளமான பயிராக உள்ளது. குட்டையாகவும், தடித்தும் (மோட்டா) காணப்படும் இதன் தானியமணிகள், ஒரு எக்டேருக்கு சுமார் 3500 - 5000 கிலோ (35-50 Q/ha) மகசூல் தரவல்லது. மேலும், இவ்வகை நெற்பயிர், தமிழ்நாடு, மற்றும் உத்தரப் பிரதேச, மாநிலங்களில் பெருமளவில் பயிரிடப்படுகின்றது.[2]
இவற்றையும் காண்க[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்
- ↑ "Details of Rice Varieties : Page 1 - 16 -Cauvery (IET-355)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்) (2017). பார்த்த நாள் 2017-03-28.