சி ஆர் - 126 - 42 - 1 (ஐ இ டி - 2969) (நெல்)
Appearance
சி ஆர் - 126 - 42 - 1 (ஐ இ டி - 2969) (CR-126-42-1 (IET-2969) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, குறுகியகால அளவில் பயிராகும் நெல் வகையாகும்.[1] அக்டோபர் - நவம்பர் பின் தாளடி பருவத்தில் 95 - 125 நாட்களில், அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஐ ஆர் 8 நெல் இரகத்தையும், துரிகான்சளி (Dhurighansali) எனும் நெல் இரகத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். மேட்டுப் பகுதிகளுடனான வண்டல் மண், மற்றும் “செந்நிறக் களிமண்” (Laterite) போன்ற நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிரின் தானியமணிகள், குள்ளமாகக் காணப்படுகிறது.
ஒரு எக்டேருக்கு சுமார் 3500 - 3700 கிலோ (35-37 Q/ha) மகசூல் தரவல்ல இந்நெல் இரகம், வடகிழக்கு இந்திய பகுதியான மேற்கு வங்க மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2][3]
சான்றுகள்
[தொகு]- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ CR-126-42-1 Notified Rice Varieties in West Bengal, India
- ↑ "Details of Rice Varieties : Page: 2". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.