உள்ளடக்கத்துக்குச் செல்

இரத்னா (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரத்னா (ஐ ஈ டி - 1411) (நெல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரத்னா
Ratna
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
திருக்குப்பம் - 6 x பன்னாட்டு நெல் - 8
வகை
புதிய நெல் வகை
காலம்
130 - 135 நாட்கள்
மகசூல்
4500 - 5000 கிலோ
வெளியீடு
1974
நாடு
 இந்தியா

ரத்னா (Ratna), முன்மொழிவு எண்:(IET-1411) என்பது; 1974 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும். 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், பன்னாட்டு நெல் - 8 என்ற நெல் இரகத்தையும், திருக்குப்பம் - 6 எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும்.[1] புன்செய் எனப்படும் மானாவாரி மற்றும் மேட்டுநிலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடிய, இது ஒரு எக்டேருக்கு சுமார் 4500 - 5000 கிலோ மகசூல் தரவல்லது. நேரடி விதைப்புக்கு ஏற்ற இரகமான இது, 85 - 90 சென்டிமீட்டர் (85-90 cm) உயரம் வளரும் குள்ளப் பயிராகும். மேலும், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச, தாராய் பிராந்தியம், மற்றும் பிகார், அசாம், ஒரிசா, மேற்கு வங்காளம், மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெருமளவில் பயிரிடப்படுகின்றது.[2][3]

சான்றுகள்

[தொகு]
  1. "Indian Rice Varietal Information Ratna (IET-1411)". rice-garud.icar-web.com (ஆங்கிலம்). 2025. Retrieved 2025-10-27.
  2. "Details of Rice Varieties : Page 1 - 18 - Ratna (IET-1411)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-03-29.
  3. Variety Name -::- Ratna CR-44-11(IET 1411)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்னா_(நெல்)&oldid=4375489" இலிருந்து மீள்விக்கப்பட்டது