அன்னபூர்ணா - 28 (நெல்)
தோற்றம்
| அன்னபூர்ணா - 28 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| பூர்வீக தைச்சுங் - 1 x பட்டாம்பி - 10 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 100 - 105 நாட்கள் |
| மகசூல் |
| 3000 - 4000 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 1971 |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
அன்னபூர்ணா 28 (Annapurna 28) என்பது; 1971 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, ஈரநில, சாகுபடிக்கு ஏற்ற குறுகியகால நெல் வகையாகும். 100 - 105 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், பூர்வீக தைச்சுங் - 1 என்ற நெல் இரகத்தையும், பட்டாம்பி - 10 எனும் நெல் இரகத்தையும் இணை சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு 3000 - 4000 கிலோ (30-40 Q/ha) மகசூல் தரவல்ல இதன் நெல், சிவப்பு நிறத்தில் உள்ளது.[1]
ஒத்த பெயரில் மற்றவை
[தொகு]- அன்னபூர்ணா 1 (நேபாள மலைத்தொடர்)
- அன்னபூர்ணா கௌரிசங்கர் (கோவை உணவகம்)
சான்றுகள்
[தொகு]- ↑ "Details of Rice Varieties : Page 1 - 8 - Jaya Annapurna-28". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-03-25.