அன்னபூர்ணா கௌரிசங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர்
வகைஉணவகம்
வகைதென்னிந்திய சைவ உணவு
நிறுவுகை1960களின் ஆரம்பம்
நிறுவனர்(கள்)கே. தாமோதரசாமி நாயுடு
தலைமையகம்கோயமுத்தூர், இந்தியா
அமைவிட எண்ணிக்கை> 13
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
தொழில்துறைஉணவகம்
உற்பத்திகள்உணவு, இனிப்புகள், சிற்றுண்டிகள்
பணியாளர்1500
இணையத்தளம்ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர்

ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர் தமிழ்நாட்டில், கோவையில் அமைந்துள்ள ஒரு உணவகக் குழும நிறுவனம்.[1]

அன்னபூர்ணா குழுமம் 1960களின் துவக்கத்தில் கே. தாமோதரசாமி நாயுடு என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. கோவை ரத்தினசபாபதிபுரத்தில் உள்ள கென்னடி திரையரங்கில் உணவு தயாரிப்பு நிறுவனமாக இது தொடங்கப்பட்டது. பின் நாயுடுவும் அவரது சகோதரர்கள் கே. ரங்கசாமி நாயுடு, கே. ராமசாமி நாயுடு, கே. லட்சுமணன் ஆகியோர் இணைந்து டீ, காபி, சிற்றுண்டி உணவுகளை வழங்கும் ஒரு காப்பிக்கடையைத் துவங்கினர். அடுத்ததாக, 1968 ஆம் ஆண்டு “ஸ்ரீ அன்னபூர்ணா” என்ற பெயரில் ஒரு சைவ உணவகத்தை ஆரம்பித்தனர். வியாபாரம் பெருகியதால் கோவையில் பல இடங்களிலும் கிளைகளை ஆரம்பித்தனர். 1983 இல் தங்கு விடுதி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது அன்னபூரணா குழுமம் கோவையிலும் தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் 13 க்கும் மேற்பட்ட உணவகங்களைக் கொண்டுள்ளது. சமையல் கருவிகள் தயாரிப்பு, உடனடி உணவுக் கலவைத் தயாரிப்பு, பானங்களைக் குப்பியிலடைத்தல், கட்டுமானம் போன்ற தொழில்துறைகளிலும் ஈடுபட்டு வருகிறது.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Narayanan, R. Y (16 December 2002). "Entertaining guests at short notice — Without sweating it out in the kitchen". Business Line. http://www.thehindubusinessline.in/2002/12/16/stories/2002121601091300.htm. பார்த்த நாள்: 12 December 2011. 
  2. ANTHIKAD-CHHIBBER, MINI. "South side story". தி இந்து. http://www.hindu.com/mp/2007/01/06/stories/2007010600730500.htm. பார்த்த நாள்: 12 December 2011. 
  3. Ramanujam, TCA (2 August 2003). "A recipe that didn't cook up". Business Line. http://www.thehindubusinessline.in/2003/08/02/stories/2003080200930900.htm. பார்த்த நாள்: 12 December 2011. 
  4. "Doyen of hospitality industry dead". The Hindu. 22 November 2006. http://hindu.com/2006/11/22/stories/2006112210750400.htm. பார்த்த நாள்: 12 December 2011. 

வெளி இணைப்புகள்[தொகு]