சிவப்புக் கவுணி (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்புக் கவுணி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
140 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 1500 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

சிவப்புக் கவுனி (Sivappu Kawni) தமிழக பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது. தமிழகம் முழுவதும் உள்ள புன்செய், மற்றும் செம்மண் நிலப் பகுதிகளில் அதிக மகசூல் தரக்கூடிய இந்நெல் வகை, நேரடி விதைப்புக்கு ஏற்ற இந்த இரகமாகும். வறட்சி, மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களை தாங்கி வளரக்கூடிய இந்நெல் இரகம், களைகளைகளைக் கட்டுப்படுத்தும் தன்மை உடையது.[1]

பண்புகள்[தொகு]

அங்கக வேளாண்மைக்கு ஏற்ற இராகமான இந்த நெல் வகை, சிவப்பு, மற்றும் கருப்பு என இருவேறு நிறங்களில் இதன் அரிசிகள் காணப்படுகிறது. ஆரோக்கியத்திற்கு ஆதாரமாக விளங்கும் இந்த அரிய வகை அரிசியில், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள், (Antioxidant) மற்றும் “பூநீலம்” (Anthocyanin) போன்ற மூலப் பொருட்கள் நிறைந்துள்ளன.[2]

சாகுபடி[தொகு]

140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1500 கிலோவரை மகசூல் தரவல்லது. குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் தரக்கூடிய இந்த நெல் இரகம், பூச்சிக்கொல்லிகள், மற்றும் இரசாயன உரங்கள் தேவையில்லை.[1]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]