ஜால்மகன் (டி டபிள்யூ - 6167) (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜால்மகன் (டிடபிள்யூ - 6167)
Jalmagan (DW-6167)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
பரோ நெல் வகையிலிருந்து தெரிவுசெய்தது
வகை
புதிய நெல் வகை
காலம்
160 நாட்கள்
மகசூல்
3000 கிலோ
வெளியீடு
1978
மாநிலம்
உத்தரப் பிரதேசம்
நாடு
 இந்தியா

ஜால்மகன் (டி டபிள்யூ - 6167) (Jalmagan (DW-6167) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மரபுசாரா, நீண்டக்கால, நெல் வகையாகும். தமிழகத்தில் ஆகத்து - செப்டம்பர் மாதம் வரையிலான சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 160 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[1]

பரோ ( Barho) எனும் நெல் வகையிலிருந்து தெரிவுசெய்து உருவாக்கப்பட்ட இந்நெல் வகை, வெள்ளம் புரண்ட பகுதிகளில் செழித்து வளரக்கூடியது. 150 - 400 சென்டிமீட்டர் (150-400 cm) உயரமான இந்த நெற்பயிரின் தானியமணிகள், குறுகி தடித்து காணப்படுகிறது. 3000 - 3500 கிலோ வரை (30-35 Q/ha) மகசூல் தரவல்ல இந்த நெல் இரகம் வடஇந்தியப் பகுதியான உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]

சான்றுகள்[தொகு]

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Details of Rice Varieties". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-20.