புதுவை 5 (நெல்)
Appearance
புதுவை - 5 PY 5 |
---|
வேளாண் பெயர் |
அரவிந்தர் |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
சுவர்ணதன் X என் எல் ஆர் - 9674 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
100 - 105 நாட்கள் |
மகசூல் |
6000 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1994 |
வெளியீட்டு நிறுவனம் |
புதுவை வேளாண் அறிவியல் நிலையம் |
மாநிலம் |
புதுச்சேரி |
நாடு |
இந்தியா[1] |
பி ஒய்- 5 (PY 5) (வேளாண் வழக்கு அரவிந்தர் ( Aravindar) எனப்படும் இந்த நெல் வகை, சுவர்ணதன் மற்றும் என் எல் ஆர் - 9674 (Swarnadhan x NLR 9674)[2] போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட புதுச்சேரி நெல் வகையாகும்.[1]
வெளியீடு
[தொகு]இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 1994 ஆம் ஆண்டு, இந்த நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[3]
காலம்
[தொகு]குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 100 - 105 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற குறுகியகால நெற்பயிர்கள், சொர்ணவாரி பட்டத்திற்கு (பருவத்திற்கு) ஏற்றதாக கூறப்படுகிறது.[1]
சாகுபடி
[தொகு]பாசன வசதியுள்ள பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெல் வகை, இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரி, மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
- இந்த நெல் இரகம், ஒரு எக்டேருக்கு 6000 கிலோவரை (6, 0 t/ha) மகசூல் தரக்கூடியது.[1]
- நீண்ட மெல்லிய, வெள்ளை அரிசியைக்கொண்ட நெல் இரகமாகும்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "P.K. Krishi Vigyan Kendra PuducherryVarieties developed and released: -" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்). © 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-07-07.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Varietal variations in flag leaf area and yield in mutant lines of PY 5 rice
- ↑ "Some of the achievements by the Kendra since its inception are -". agri.puducherry.gov.in (ஆங்கிலம்). © 2018. Archived from the original on 2018-06-28. பார்க்கப்பட்ட நாள் 2018-07-07.
{{cite web}}
: Check date values in:|date=
(help); Unknown parameter|dead-url=
ignored (help)