நொறுங்கன் (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நொறுங்கன்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
105 – 110 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 2100 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

நொறுங்கன் (Norungan) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டத்தித்தில், பிரதானாமாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 2100 கிலோ தானிய மகசூல் கிடைப்பதாக கூறப்படுகிறது.[1]

பருவகாலம்[தொகு]

குறுகியக்கால பயிரான 110 நாட்கள் வயதுடைய இந்நெல் இரகத்தை, ஒக்டோபர் மாதம் தொடங்கும் பின் பருவத்தில் (தமிழ் மதம் ஐப்பசியில்) விதைத்து, சனவரியில் (தமிழ் மதம் தையில்) அறுவடைச் செய்யபடுகிறது.[1] மேலும் இதேப் பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.[2]

வளருகை[தொகு]

மணல் கலந்த மானாவரி (புன்செய்) நிலங்களில், மானாவாரிப் பயிராக விதைக்கப்பட்டு வளரக்கூடிய இந்த நெல் வகை, போதிய மழை நீர் இல்லாத போது இலைசுருட்டுப் புழு மற்றும் தண்டு துளைப்பான் போன்ற பூச்சிக்களால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.[1]

குறிப்புகள்[தொகு]

  • பாரம்பரிய நெல் வகைகளில், நொறுங்கன் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதாக கூறப்படுகிறது.[3]
  • சொரசொரப்பான நெல் வகையான நொறுங்கனின் அரிசியில் இட்லி செய்ய ஏற்றதாக கருதப்படுகிறது.[4]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நொறுங்கன்_(நெல்)&oldid=3248626" இருந்து மீள்விக்கப்பட்டது