பன்னாட்டு நெல் - 579
தோற்றம்
(ஐ ஆர் - 579 (நெல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பன்னாட்டு நெல் - 579 IR 579 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| தடுகன் x பன்னாட்டு நெல் - 8 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 130 - 135 நாட்கள் |
| மகசூல் |
| 5000 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 1978 |
| வெளியீட்டு நிறுவனம் |
| IRRI |
| மாநிலம் |
| இமாச்சலப் பிரதேசம் |
| நாடு |
பன்னாட்டு நெல் - 579 (IR-579) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மத்தியகால, நெல் வகையாகும். சூலை - ஆகத்து மாதம் வரையிலான சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. தடுக்கன் எனும் நெல் இரகத்தையும், பன்னாட்டு நெல் - 8 நெல் இரகத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்நெல் வகை, அதி உயர பிராந்தியங்களில் செழித்து வளரக்கூடியது. மேலும் இந்த நெற்பயிரின் தானியமணிகள், நீண்டு தடித்து காணப்படுகிறது. 1977 இல், எகிப்தியர்கள் கண்டறிந்ததாக கருதப்படும் இந்த நெல் வகை,[1] வட இந்தியப் பகுதியான இமாச்சலப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ Zinc practices to nursery bed for efficient paddy [IR 579 and Giza 172 Egyptian variety crop production [Egypt] 1977
- ↑ "Details of Rice Varieties". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-07-19.