கல்லுருண்டை (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கல்லுருண்டை
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
110 - 120 நாட்கள்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

கல்லுருண்டை பாரம்பரிய நெல் வகையைச்சார்ந்த இது, தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டப் பகுதிகளில் விளையக்கூடிய நெல் இரகமாகும். 126 சென்டிமீட்டர் உயரம் வரையில் வளரக்கூடிய இதன் நெற்பயிர், 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[1] களிகலப்பு மண் வகைக்கு ஏற்ற, மற்றும் நன்கு வளரக்கூடிய இந்த கல்லுருண்டையின் நெற்பயிர், வறட்சி, பூச்சி மற்றும் உப்புத் தன்மையை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட நெல் இரகமாகும். கல்லுருண்டை நெல்லின் தானியமணி, கருப்பு நிற மங்கிய கோடுகளுடன் காணப்படும், மஞ்சள் நிறமுடைய நெல்லாகும். மேலும் இதன் நெல் மணி சற்று தடித்தும் (மோட்டா) வெளிறிய மஞ்சள் நிறமுடன் உள்ளது.[2]

பயன்கள்[தொகு]

இந்த நெல்லின் அரிசியில் இட்லி, தோசையும், மற்றும் பிற உணவு வகைகளுக்கும் ஏற்றதாக உள்ளது.[3] மேலும் இந்த நெற்பயிரிலிருந்து கிடைக்கக்கூடிய வைக்கோல், கூரை வேய்தலுக்குப் பயன்படுகின்றது.[2]

பருவகாலம்[தொகு]

குறுகியகாலப் பயிரான கல்லுருண்டை, தாளடி, பிசாணம் எனப்படும் பின்சம்பா (பட்டம்) பருவகாலமான செப்டம்பர் 15 முதல், - பிப்ரவரி 14 முடிய உள்ள இடைப்பட்ட காலத்திலும், மற்றும் நவரை பட்டம் எனப்படும் டிசம்பர் 15 முதல், - மார்ச் 14 முடிய, இந்த இரகத்திற்கு ஏற்ற பருவங்களாகும்.[2][4]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லுருண்டை_(நெல்)&oldid=3238886" இருந்து மீள்விக்கப்பட்டது