அம்பை - 18 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்பை - 18
ASD 18
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஏடிடீ-31 x ஐ ஆர் - 50
வகை
புதிய நெல் வகை
காலம்
105 - 110 நாட்கள்
மகசூல்
7300 கிலோஎக்டேர்
வெளியீடு
1991
வெளியீட்டு நிறுவனம்
TNAU, அம்பாசமுத்திரம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

அம்பை - 18 (ASD 18) எனப்படும் இந்த நெல் வகை, ஆடுதுறை - 31 நெல் இரகத்தையும், ஐ ஆர் - 50 (ADT 31 / IR 50) நெல் இரகத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

வெளியீடு[தொகு]

தமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1991 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[3]

காலம்[தொகு]

குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 105 -110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற குறுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[4]

சாகுபடி[தொகு]

நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 18 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]

சிறப்புப் பண்புகள்[தொகு]

  • இந்த நெல் இரகம் ஒரு ஏக்கருக்கு 7300 கிலோவரை ( 7.3 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இதன் நெற்பயிர் குலைநோயை எதிர்க்கும் திறனுடையது.[5]
  • இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் மிதமெல்லிய அளவில் காணப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-04.
  2. 2.0 2.1 "Rice Knowledge Management Portal ASD 18". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2017-07-09.
  3. CROP VARIETIES RELEASED BY THE - TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY FROM 1971 to 2003 - I. AGRICULTURE
  4. "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) (© TNAU 2017). பார்த்த நாள் 2017-08-04.
  5. குறுவைக்கு ஏற்ற உயர் விளைச்சல் நெல் ரகங்கள்!
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பை_-_18_(நெல்)&oldid=2480606" இருந்து மீள்விக்கப்பட்டது