நெல் ஆராய்ச்சி நிலையம், அம்பாசமுத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 13 நிறுவனங்களில் ஒன்று அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையம் (Rice Research Station, Ambasamudram)[1] ஆகும். நெல் ஆராய்ச்சிக்கென்று ஆரம்பிக்கப்பட்ட நிலையங்களில் இது மூன்றாவதாக கருதப்படுகிறது. இது பேராசிரியர் மற்றும் தலைவரின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ளது[2].

இது மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தின் நெல் சாகுபடியில் ஏற்படும் இன்னல்களைக் களைய 1937ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில் (SH-178) உள்ளது[2] [3]

விவசாயப் பட்டயப்படிப்பு[தொகு]

அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள வேளாண்மை மையத்தில் பட்டயப்படிப்பு (Diplomo in Agriculture Sciences, DSc., (Agri)) கற்பிக்கப்படு்கிறது. இது தமிழ் நாடு வேளாண்மைப்பல்கலைக் கழகத்தின் பட்டயப்படிப்பு கற்பிக்கப்படும் ஆறு வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் ஒன்றாகும். மற்ற ஐந்து நிலையங்களாவன: வேளாண்மை எண்ணெய் வித்துகள் ஆராய்ச்சி நிலையம் (திண்டிவனம்), வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் (கோவில்பட்டி), வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையம் (பவானிசாகர்), தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையம் (பேச்சிப்பாறை) மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலையம் (அருப்புக்கோட்டை)

இரகங்கள் வெளியீடு[தொகு]

கடந்த 70 வருடங்களில் 20 இரகங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. 1986 இல் வெளியிடப்பட்ட ஏஎஸ்டி 16[2] இன்றும் விவசாயிகளால் விரும்பி பயிடப்படும் ஒரு இரகமாகும்

விருதுகள்[தொகு]

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் 1996 ஆம் ஆண்டு சிறந்த ஆராய்ச்சி நிலையத்திற்கான விருது வழங்கப்பட்டது[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-12-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-02-03 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 http://agritech.tnau.ac.in/rs_map/rs_ambasamudram.html
  3. http://agritech.tnau.ac.in/about_us/abt_us_reserach_ambasamudram.html