மரநெல் (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புழுதிக்கார்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
120 – 125 நாட்கள்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

மரநெல் எனப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் இரகமாகும். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டையின் வட்டாரங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படும் இது, 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாகும். சிவப்பு நிறத்திலுள்ள இந்த நெல்லின் அரிசி, பெரு நயத்துடன் (தடித்து) உள்ளது. மேலும், இம்மர நெல்லின் தானிய நெல்மணிகளின் விதையுறை கடினத்தன்மையுடன் காணப்படுவதால், முதிர்வடைந்த அறுவடை காலத்தில் தொடர்மழையால் எளிதில் முளைத்து விடுவதில்லை எனக் கூறப்படுகிறது. [1]

பருவகாலம்[தொகு]

மத்திய மற்றும், நீண்டகால நெற்பயிர்கள் சாகுபடி செய்யக்கூடிய செப்டம்பர் மாதம் முதல், ஒக்டோபர் வரையிலான ‘தாளடி’, ‘பிசாணம்’, அல்லது ‘பின் பிசாணம்’ எனப்படும் பின் சம்பா பருவத்திலும், மற்றும் குறுகியகால நெற்பயிர்கள் சாகுபடி செய்யக்கூடிய, டிசம்பர் மாதம் முதல், சனவரி வரையிலான நவரைப் பட்டத்திலும் (கோடைகால பருவம்), மரநெல் பயிரிட ஏற்றதாக உள்ளது.[1][2]

  • நாற்றுக் கொண்டு நடவு செய்யும் முறையே பெரும்பான்மையாக பின்பற்றப்படுகிறது.
  • கடினமான விதையுறை உடைய மரநெல், பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்டு செயல்படுகிறது.[1]
  • மரநெல்லின் அரிசியில் இட்லி, தோசை போன்ற சிற்றுண்டி வகைகள் தயாரிக்கப்படுகின்றன.[3]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரநெல்_(நெல்)&oldid=3253373" இருந்து மீள்விக்கப்பட்டது