அரியான் (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரியான்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்
மகசூல்
2000 - 2100 கிலோ, 1 எக்டேர்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

அரியான் (Ariyaan) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, மணற்பாங்கானப் பிராந்தியமாகக் காணப்படும் ரெகுநாதபுரம் பகுதிகளில் பிரதானமாக விளைவிக்கக்கூடிய இந்நெற்பயிர், நீர்நிலைகளின் கரையோர மணல் கலந்த மண் இதற்கு மிகவும் ஏற்றது.[1]

பருவம்[தொகு]

நான்கு வகையான அரியான் நெற்பயிர்களும், பொதுவாக நவரை பட்டமான ஒக்டோபர் மாதம் முதல், நவம்பர் மாதம் முடிய உள்ள (ஐப்பசியில்) விதைத்து, சனவரியில் (தையில்) அறுவடைச் செய்யபடுகிறது.[1] மேலும் இதேப் பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.[2]

காலம்[தொகு]

குறுகியக் கால நெற்பயிரான இது, 120 நாட்களில் வறட்சியைத் தாங்கி மிக உயரமாக 5,½ - 6,½ அடி வரையில் வளரக்கூடிய இந்த நெல் இரகம், கடலோரப்பகுதிகளிலும், மற்றும் ஆற்றுப்படுகைகளிலும் காணப்படும் மணற்பாங்கான நிலங்களில் நன்கு செழிக்கும்.

மகசூல்[தொகு]

ஒரு ஏக்கருக்கு 2000 - 2100 கிலோ வரையிலும் மகசூல் கிடைப்பதாக கருதப்படும் இந்த வகை நெற்பயிருக்கு, முதல் 3 மாதகால இடையில் ஒருமுறை மழையிலேயே சிறந்த மகசூலை தரக்கூடியதாகும்.[1]

குறிப்புகள்[தொகு]

  • அரியான் நெல் வகையில், (அ) வெள்ளை அரியான் (ஆ) கருப்பு அரியான் (இ) சிவப்பு அரியான் மற்றும் (ஈ) வாழை அரியான் என நான்கு வகைகள் உள்ளன.
  • அரியான் நெல் வகை அறுவடையை, முதலில் மேற்புற நெற்கதிர்களையும், இரண்டாவது நடுவக வைக்கோலையும், பிறகு அடித்தண்டு என மூன்று நிலைகளில் அறுவடை செய்யப்படுகிறது.
  • இவ்வகை நெற்பயிர்கள், இலை சுருட்டுப் புழுக்களாலும, தண்டு துளைப்பான் பூசிக்களாலும் எளிதில் பாதிக்கக்கூடிய நெற்பயிர் எனக் கூறப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க[தொகு]


சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Traditional Varieties grown in Tamil nadu - Ariyaan". agritech.tnau.ac.in (ஆங்கிலம்). © 2014 TNAU. 2017-02-08 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  2. பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியான்_(நெல்)&oldid=3260915" இருந்து மீள்விக்கப்பட்டது