ஐ ஆர் 20 (ஐ ஆர் 532 - ஈ - 576) (நெல்)
Appearance
ஐஆர்-20 IR-20 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
ஐஆர்-262 x டிகேஎம்-6 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
135 - 140 நாட்கள் |
மகசூல் |
5000 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1974 |
நாடு |
இந்தியா |
ஐ ஆர் 20 (ஐ ஆர் 532 - ஈ - 576) (IR-20 (IR-532-E-576) என்பது; 1974 - 1978 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும்.[1] 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஐ ஆர் - 262 (IR262) என்ற நெல் இரகத்தையும், டீ கே எம் - 6 (TKM-6) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். கடலோர பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இது, அரை குள்ள அளவில் (100-110 செ. மீ) வளர்கிறது. மிதமான அளவுள்ள இதன் தானியமணிகள், ஒரு எக்டேருக்கு சுமார் 5000 - 5500 கிலோ (50-55 Q/ha) மகசூல் தரவல்லது. மேலும், இவ்வகை நெற்பயிர், பீகார், கருநாடகம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கிழக்கு உத்தரப் பிரதேசம், மற்றும் “கோஸ்டா” எனப்படும் ஆந்திர கடற்கரை பிராந்தியங்களில் பெருமளவில் பயிரிடப்படுகின்றது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Details of Rice Varieties : Page 1 - 15 - IR-20 (IR-532-E-576)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.