ஆடுதுறை - 36 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடுதுறை - 36
ADT 36
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
திரிவேணி x ஐஆர்-20
வகை
புதிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
6000 கிலோ எக்டேர்
வெளியீடு
1980
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஆடுதுறை - 36 (ADT 36) பிரபலமாக சிவப்பு சிறுமணி (Red Sirumani) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, திரிவேணி (Triveni) என்ற நெல் இரகத்தையும், ஐ ஆர் - 20 (IR 20) என்ற நெல் இரகத்தையும் இயற்கை முறையில் இணைச் சேர்த்து உருவாக்கப்பட்ட [1] தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

வெளியீடு[தொகு]

தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[3] 1980 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

காலம்[தொகு]

குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[2] இதுபோன்ற குறுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[4]

சாகுபடி[தொகு]

நீர்ப்பாசன வசதியுள்ள தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் ஆடுதுறை - 36 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[3]

சிறப்புப் பண்புகள்[தொகு]

  • இந்த நெல் இரகம் ஒரு ஏக்கருக்கு 5500 - 6000 கிலோவரை (5.5 - 6 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இதன் தானியமணிகள் மிதமெல்லிய அளவில் உள்ளது.
  • இந்நெல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.[2]
  • இவ்வகை நெற்பயிர் குலை நோய் எதிர்ப்பு திறனுடையதாக உள்ளது.[3]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Details of Rice Varieties : Page 2 - 93". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-04.
  2. 2.0 2.1 2.2 2.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-31.
  3. 3.0 3.1 3.2 "Rice Knowledge Management Portal ADT 36". www.rkmp.co.in (ஆங்கிலம்) - 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-08-04.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Paddy Varieties of Tamil Nadu - Long duration varieties". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_36_(நெல்)&oldid=3715279" இலிருந்து மீள்விக்கப்பட்டது