கூம்பாளை (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூம்வாளை
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
128 - 130 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 1350 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் இரகம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

கூம்பாளை அல்லது கூம்வாளை பாரம்பரிய நெல் வகைகளில் முதன்மையானதாக கருதப்படும் இந்நெல், தென்னம்பாளைப் போன்ற நெற்கதிர்கள் வெளிவருவதால் இந்த நெற்பயிருக்கு கூம்பாளை என அழைக்கப்படுகிறது. நெல்லும், அரிசியும் சிவப்பு நிறத்திலேயே காணப்படும் கூம்பாளை நெல், மணற்பாங்கான பகுதிகளில் செழித்து வளரக்கூடியதாகும்.[1] சம்பா பருவத்திற்கு மிகவும் ஏற்ற இராகமான இது, 128 - 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. ஏக்கருக்கு சுமார் 1350 கிலோ நெல் தானியமும், சுமார் 1800 கிலோ வைக்கோலும் தரக்கூடிய இந்நெல் வகை, சுமார் ஐந்தடி (5 அடி) உயரம் வரையில் வளரும் இயல்புடையது.[2][3]

மருத்துவக் குணம்[தொகு]

பண்டையக்கால நெல் வகைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு மருத்துவக் குணம் இருந்தபோதிலும் கூம்பாளைக்கு மகத்தான மருத்துவக் குணம் உண்டு. நோய் எதிர்ப்புச் சக்தி அதீத அளவில் உள்ள இந்த நெல்லை, ஊறவைத்து ஆட்டுக்கல்லில் அரைத்து, பருத்தித் துணியில் வடிகட்டி, அந்த அரிசிப் பாலில் சிறிது தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து தினசரிக் காலை உணவாக உண்டுவந்தால் அசதியைப் போக்கி, உடல் வலிமை பெறுவதாக கூறப்படுகிறது. மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த அரிசியின் சோறு, பிரசவக் காலத்தில் ஏற்படும் வலி வெகுவாக குறைவதாகவும் கருதப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "தண்ணீர் குடிக்காத கூம்பாளை". தி இந்து (ஆங்கிலம்) - சூன் 06, 2015. Retrieved 2017-01-15.
  2. "PADDY VARIETIES CONSERVED BY CIKS". Archived from the original on 2017-05-14. Retrieved 2017-01-15.
  3. "தமிழ்நாட்டின் நெல் இரகங்கள்". agritech.tnau.ac.in (ஆங்கிலம்). Retrieved 2017-01-15.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூம்பாளை_(நெல்)&oldid=3722468" இலிருந்து மீள்விக்கப்பட்டது