சூலை குறுவை (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூலை குறுவை
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
110 - 120 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 1125 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

சூலை குறுவை (Soolai kuruvai) பாரம்பரிய நெல் வகையைச்சார்ந்த இது, தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள செம்பொடை, பெரிய குத்தகை, தோப்புத் துரை போன்ற பகுதிகளிலுள்ள கரையோர கிராமங்களில் விளையக் விளையக்கூடிய நெல் இரகமாகும். 110 - 120 சென்டிமீட்டர் உயரம் வரையில் வளரக்கூடிய இதன் நெற்பயிர், 130 - 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. களிகலப்பு மண் வகைக்கு ஏற்று வளரக்கூடிய இந்த சூலை குறுவையின் நெற்பயிர், நன்செய் நிலமான பாசன முறைப் பகுதியிலும், மற்றும் புன்செய் நிலமான மானாவாரி நிலத்திலும் நன்கு வளரக்கூடிய நெல் இரகமாகும். சூலை குறுவையின் நெல்மணி தடித்தும், வெளிறிய மங்கிய பழுப்பு நிறத்துடனும் காணப்படும்.[1]

மகசூல், பயன்கள்[தொகு]

ஒரு ஏக்கருக்கு 15 பைகள் (75 கிலோ/சாக்கு / 1125 கிலோ) மகசூல் கிடைக்கக்கூடிய இந்த நெற்பயிரிலிருந்து கிடைக்கக்கூடிய வைக்கோல், கூரை வேய்தலுக்கும், மற்றும் மாட்டுத் தீவனமாகவும் பயன்படுகின்றது.[1]

பருவகாலம்[தொகு]

மத்தியகால மற்றும் நீண்டகாலப் பருவங்களாக உள்ள தாளடி, பிசாணம், அல்லது பின் பிசாணம் எனப்படும் பின் சம்பா (பட்டம்)[2] பருவகாலமான, செப்டம்பர் 15 முதல், - பிப்ரவரி 14 முடிய உள்ள இடைப்பட்ட காலத்திலும், மற்றும் குறுவை பட்டம் எனப்படும் சூன் 1 முதல், - ஆகத்து 31 முடிய, இந்த நெல் இரகத்திற்கு ஏற்ற பருவங்களாகும்.[1]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலை_குறுவை_(நெல்)&oldid=3245828" இருந்து மீள்விக்கப்பட்டது