கிசா - 14 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிசா - 14
Giza-14
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
கிசா - 4 வகையிலிருந்து உருவாக்கப்பட்டது
வகை
புதிய நெல் வகை
காலம்
140 - 150 நாட்கள்
வெளியீடு
1978
நாடு
 இந்தியா

கிசா - 14 (Giza-14) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மத்தியகால, மற்றும் நீண்டகால நெல் வகையாகும். ஆகத்து - செப்டம்பர் மாதம் வரையிலான சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 140 - 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[1] கிசா - 4 (Giza-4) எனும் நெல் வகையிலிருந்து தெரிவுசெய்து உருவாக்கப்பட்ட இந்நெல் வகை, மலை நெல் நீர்ப்பாசன முறையில் நன்கு சாகுபடி செய்யப்படுகிறது.

90 - 95 சென்டிமீட்டர் (90-95 cm), அரைக்குள்ளப் பயிராக வளரக்கூடிய இந்த நெற்பயிரின் தானியமணிகள், குட்டையாக தடித்தும், சற்று கடினமாகவும் உள்ளது. இதன் அரிசி சமைக்க தரமாக இருப்பதாக கூறப்படும் இவ்வகை நெல், வடஇந்தியப் பகுதியான சம்மு காசுமீர் பகுதியில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]

சான்றுகள்[தொகு]

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Details of Rice Varieties". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-07-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசா_-_14_(நெல்)&oldid=3597032" இலிருந்து மீள்விக்கப்பட்டது