ஆடுதுறை - 1 (நெல்)
| ஆடுதுறை - 1 ADT 1 |
|---|
| வேளாண் பெயர் |
| சிவப்பு சிறுமணி |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| நல் விதைத் தேர்வு முறை |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 170 - 175 நாட்கள் |
| மகசூல் |
| 3400 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 1925 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
ஏ டி டீ - 1 (ADT 1) பிரபலமாக சிவப்பு சிறுமணி (Red Sirumani) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
வெளியீடு
[தொகு]தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1925 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]
காலம்
[தொகு]நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 175 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி / பிசாணம், மற்றும் பின் பிசாணம் போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]
சாகுபடி
[தொகு]நீர்ப்பாசன வசதியுள்ள தமிழகத்தின் தஞ்சை, மற்றும் தென் ஆற்காடு மாவட்டங்களில், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் ஆடுதுறை - 1 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]
சிறப்புப் பண்புகள்
[தொகு]- இந்த நெல் இரகம் ஒரு ஏக்கருக்கு 3400 கிலோவரை ( 3.4 t/ha) மகசூல் தரக்கூடியது.
- இதன் தானியமணிகள் தடித்து குட்டையாக உள்ளது.
- இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.[1]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. Retrieved 2017-07-31.
- ↑ 2.0 2.1 "Rice Knowledge Management Portal ADT 1". www.rkmp.co.in (ஆங்கிலம்) - 2011. Retrieved 2017-07-29.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Paddy Varieties of Tamil Nadu - Long duration varieties". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU 2017. Retrieved 2017-07-31.