குள்ளக்கார் (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குள்ளக்கார்
குள்ளக்கார் அரிசி
குள்ளக்கார் அரிசி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
100 - 110 நாட்கள்
தோற்றம்
பண்டைய நெல் இரகம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா[1]

குள்ளக்கார் (Kullakar) பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்றான இது, இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. பாரம்பரிய நெல் வகையைச் சார்ந்த இது, சுகாதார நலன்கள் நிறைந்த, பல்வேறு சிவப்பு நிற அரிசி இரகங்களில் ஒன்றாகும். குறுகியகால நெற்பயிராக உள்ள இது,[2] ஆண்டு முழுவதும், அனைத்துப் பட்டங்களிலும் (3 பருவங்கள்) பயிர் செய்ய ஏற்றதாகும். மேலும் பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் போன்ற தொந்தரவுகளை மிகவும் எதிர்க்கும் தன்மைக்கொண்டது. பெரும்பாலும் உள்நாட்டுத் தேவைகளுக்கு பயன்படுத்தப்படு இந்நெல், உப்பு மண், உவர் மண் போன்ற பல்வேறு நிலத் தன்மைகேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு, வறட்சி, மற்றும் நீர்த்தேக்கப் பகுதிகளிலும் தாங்கி வளரக்கூடியதாகும்.[3]

சத்துக்கள்[தொகு]

குள்ளக்கார் எனும் இந்த இரகத்தில், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள், துத்தநாகம், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும். உடல் எடை குறைக்க நினைப்போர் இந்நெல்லின் அரிசிச்சோறு சாப்பிடுவதால், சாப்பிடும் அளவு குறைந்தும் அதேவேளை வயிறும் நிறைவதகாகக் கூறப்படுகிறது.[4]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Kullakar
  2. Traditional Rice Varieties - Kullakkar
  3. "Ruminations on Rice". கர்யா நுகர்வோர் தயாரிப்புகள் நிறுவனம் (ஆங்கிலம்). © 2011-2015. 2016-03-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-01-03 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  4. "உடலுக்கு பலத்தை கொடுக்கும் முத்தான பாரம்பரிய வகை அரிசிகள்". செய்திப்புனல் வலைப்பதிவு (ஆங்கிலம்). © ஒக்டோபர் 31, 2016. 2017-01-03 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)[தொடர்பிழந்த இணைப்பு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குள்ளக்கார்_(நெல்)&oldid=3550858" இருந்து மீள்விக்கப்பட்டது