ஆடுதுறை - 3 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆடுதுறை - 3
ADT 3
வேளாண் பெயர்
குறுவை
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நல் விதைத் தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
90 - 95 நாட்கள்
மகசூல்
3500 கிலோ எக்டேர்
வெளியீடு
1925
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஏ டி டீ - 3 (ADT 3) பிரபலமாக குறுவை (Kuruvai) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

வெளியீடு[தொகு]

தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1925 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

காலம்[தொகு]

குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 95 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற குறுங்கால நெற்பயிர்கள், நவரை,சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]

சாகுபடி[தொகு]

நீர்ப்பாசன வசதியுள்ள பகுதிகளிலும், மத்திய மற்றும் வட தமிழக மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் ஏ டி டீ - 3 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]

சிறப்புப் பண்புகள்[தொகு]

  • இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 3500 கிலோவரை ( 3.5 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இதன் தானியமணிகள், தடித்து குட்டையாக உள்ளது.
  • இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.
  • இவ்வகை குறுவைப் பருவத்திற்கு மிகவும் ஏற்றதாக கூறப்படுகிறது.[1]
  • இந்த நெற்பயிர், பருவமழை தாமதிக்கும் காலங்களிலும், அதிக மகசூல் தரவல்ல வகையாகக் கருதப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-07-31.
  2. 2.0 2.1 2.2 "Rice Knowledge Management Portal ADT 3". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2017-07-29.
  3. "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) (© TNAU 2017). பார்த்த நாள் 2017-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_3_(நெல்)&oldid=2548975" இருந்து மீள்விக்கப்பட்டது