குதிரைவால் சம்பா (நெல்)
குதிரைவால் சம்பா |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
130 - 140 நாட்கள் |
மகசூல் |
1300 கிலோ 1 ஏக்கர் |
தோற்றம் |
பண்டைய நெல் இரகம் |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
![]() |
குதிரைவால் சம்பா (Kudhiraival Samba) எனப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் இரகமாகும். தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திலுள்ள செக்கணம் ஊராட்சிக்கு உட்பட்ட ‘கம்பளத்துப்பட்டி’ வட்டாரங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படும் இது, ஒரு ஏக்கருக்கு சுமார் 1. 3 டன்கள் மகசூல் கொடுக்கக்கூடியதாக உள்ளது.[1]
பருவகாலம்[தொகு]
சுமார் 140 - 150 நாட்கள் மொத்தப் பயிர்க்கால அளவுடைய இதன் நெற்பயிர்கள், மத்தியகால மற்றும், நீண்டகால நெற்பயிர்கள் சாகுபடி செய்யக்கூடிய ஆகத்து மாதம் தொடங்கும் சம்பாப் பருவம் ஏற்றதாக கூறப்படுகிறது. மேலும் இப்பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.[2]
- குதிரைவால் சம்பா நெற்பயிர்கள், பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டதோடு, இதன் பயிர்த்தண்டுகள் சாயும் தன்மையற்று உள்ளது.[1]
இவற்றையும் காண்க[தொகு]
![]() |
விக்சனரியில் குதிரைவால் சம்பா என்னும் சொல்லைப் பார்க்கவும். |
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Traditional Varieties grown in Tamil nadu - Kuthiraival Samba". agritech.tnau.ac.in (ஆங்கிலம்). © TNAU. 2017-01-27 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி) - ↑ பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]