உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பதிசாரம் (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்பதிசாரம்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
140 – 145 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 1650 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

திருப்பதிசாரம் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, டெல்டா பாசனப் பகுதிகளிலும் திருச்சி போன்ற சில பகுதி களிலும் காணப்படும் மிதமான உவர் நிலத்திலும் சாகுபடி செய்ய ஏற்ற நெல் இரகமாகும். திருச்சி மாவட்டத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப் பட்டுவந்த இந்த இரகத்தை, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தற்போது விவசாயிகள் சாகுபடி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். சுமார் நான்கடி உயரம்வரை வளரும் தன்மை கொண்ட இந்த நெல் இரகம், 140 நாட்களில் அறுவடை செய்யக்கூடியவையாகும். ஒரு ஏக்கருக்கு குறைந்து 22 மூட்டைவரை மகசூல் கிடைக்ககூடிய இது, நிலத்தின் வளத்துக்கு ஏற்ப மகசூல் தருவதாக கருதப்படுகிறது.[1]

அரிசியின் தன்மை

[தொகு]

இயல்பான மஞ்சள் நிற நெல்லும், வெள்ளை அரிசியும் கொண்ட இது, நடுத்தர இரகமாக இருப்பதால் இல்லத்தரசிகள் விரும்பும் வண்ணம் சீக்கிரம் வேகக்கூடியது. இதன் சோறு வெண்மையாக இருப்பதோடு, உணவுக்கு ஏற்ற இரகமாகவும் உள்ளது. முற்காலத்தில் நமது முன்னோர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது கட்டுச்சோறு எடுத்துச் செல்வது இருந்துள்ளது. அவ்வேளையில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அவரவர் வீட்டில் இந்நேல்லின் அரிசிச் சோற்றை சமைத்து எடுத்துச் செல்வார்கள். அந்த வகையில், திருப்பதி சாரம் அரிசியில் புளி சாதம் தயாரித்து வாழை இலையில் கட்டிவைத்துவிட்டால், வாரக் கணக்கில் சாதம் கெடாமல் இருக்குமென்று கூறப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "நம் நெல் அறிவோம்: கட்டுச்சோற்றுக்கு சுவை தரும் திருப்பதி சாரம்". தி இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 2016-12-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பதிசாரம்_(நெல்)&oldid=3600008" இலிருந்து மீள்விக்கப்பட்டது