குறுவைக் களஞ்சியம் (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குறுவைக் களஞ்சியம்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
105 - 110 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு 1500 - 2000 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் இரகம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

குறுவைக் களஞ்சியம் (Kuruvai Kalanchiyam) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டத்தித்தில், பிரதானாமாக விளைவதாக கருதப்படும் இந்நெல் வகை, பொய்க்காத பருவமழைக் காலத்தில் ஒரு ஏக்கருக்கு சுமார் 1500 - 2000 கிலோ தானிய மகசூலும், 1 டன் அளவுக்கு வைக்கோலும் கிடைப்பதாக கூறப்படுகிறது.[1]

பருவகாலம்[தொகு]

குறுகியக்கால பயிரான 110 நாட்கள் வயதுடைய இந்நெல் இரகத்தை, செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பருவத்தில் ( தமிழ் மதம் ஆவணியில்) விதைத்து, சனவரியில் (தமிழ் மதம் தையில்) அறுவடைச் செய்யபடுகிறது.[1] மேலும் இதேப் பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.[2]

குறிப்புகள்[தொகு]

  • குறுவைக் களஞ்சிய நெல் வகை நேரடி விதைப்பு முறையில், ஏக்கருக்கு 40 - 50 கிலோ விதை அளவு தேவைப்படுகிறது.[1]
  • சிவப்பு சித்திரை கார் அரிசி கஞ்சியை விட குறுவை களஞ்சியத்தின் அரிசிக் கஞ்சி வேறுபடுவதோடு, சமைக்கப்பட்ட சோறு இரண்டு நாட்களுக்குப் பிறகும் சிறந்த சுவையுடன் இருக்கும் என கூறப்படுகிறது.[1]
  • குறுவைக் களஞ்சிய நெல் சொரசொரப்புடைய கடினமான நெல் வகையாகும்.[3]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]