கரிஷ்மா (சி ஆர் - 1 - 6) (நெல்)
Appearance
கரிஷ்மா (சிஆர்-1-6) Karishma (CR-1-6) |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
ஜி ஈ பி - 24 x டீ (என்) 1 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
125 - 130 நாட்கள் |
வெளியீடு |
1974 |
நாடு |
இந்தியா |
கரிஷ்மா (சி ஆர் - 1 - 6) (Karishma (CR-1-6) என்பது; 1974 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும்.[1] 125 - 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஜி ஈ பி - 24 (GEB-24) என்ற நெல் இரகத்தையும், டீ (என்) 1 (T(N)1) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். புன்செய் எனப்படும் மானாவாரி பகுதிகளில் நன்கு வளரக்கூடிய, இது ஒரு எக்டேருக்கு சுமார் 4000 கிலோ (40 Q/ha) மகசூல் தரவல்லது. மேலும், இவ்வகை நெற்பயிர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச, தாராய் பிராந்தியம், மற்றும் குசராத்து பகுதிகளில் பெருமளவில் பயிரிடப்படுகின்றது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Details of Rice Varieties : Page 1 - 17 - Karishma (CR-1-6)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-03-28.