உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடுதுறை - 7 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடுதுறை - 7
ADT 7
வேளாண் பெயர்
வெள்ளை ஒட்டடம்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நல் விதைத் தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
220 - 225 நாட்கள்
மகசூல்
2200 கிலோ எக்டேர்
வெளியீடு
1925
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஏ டி டீ - 7 (ADT 7) பிரபலமாக வெள்ளை ஒட்டடம் (White ottadam) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

வெளியீடு

[தொகு]

தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1925 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

காலம்

[தொகு]

மிக நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 220 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி/ பிசாணம், மற்றும் பின் பிசாணம். போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]

சாகுபடி

[தொகு]

நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]

சிறப்புப் பண்புகள்

[தொகு]
  • இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 2200 கிலோவரை ( 2.2 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இதன் தானியமணிகள், தடித்து குட்டையாக உள்ளது.
  • இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.
  • ஊடு வகை ஊடுபயிராக சாகுபடி செய்வதற்கு சிறந்த இரகமாக கருதப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-31.
  2. 2.0 2.1 "Rice Knowledge Management Portal ADT 7". www.rkmp.co.in (ஆங்கிலம்) - 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-07-31.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Paddy Varieties of Tamil Nadu - Long duration varieties". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_7_(நெல்)&oldid=3715315" இலிருந்து மீள்விக்கப்பட்டது