சீரகச் சம்பா (நெல்)
சீரகச் சம்பா |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
125 130 நாட்கள் |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
![]() |
சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல் இரகங்களில் ஒன்றாகும். சீரகம் எனும் சமையல் பொருளின் வடிவத்துக்கு ஒத்ததாக காணப்படுவதால், இந்த நெல்லுக்கு "சீரகச் சம்பா" எனப் பெயரிடப்பட்டுள்ளது.[2] இந்நெல்லின் அரிசி பிரியாணிகள் செய்ய ஏற்றது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பண்டைய நெல்வகைகளில், சீரகச்சம்பா தரத்திலும், விலையிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது.[3] இந்த அரிசியின் சோறு மருத்துவப் பயனுடையது.
பயிரிடப்படும் இடங்கள்[தொகு]
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பயிரிடப்படும் இந்த நெல் இரகம், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதியில் பெருமளவில் வேளாண்மைச் செய்யப்படுகிறது.
சிறப்பு[தொகு]
சீரகச் சம்பா நறுமணமும், அறுசுவையும் நிறைந்தது. இது, எளிதாக செரிப்பதோடு, இரைப்பை ஒழுங்கீனங்களை தடுத்து பசியைத் தூண்டக்கூடியது.[4] ஆரம்ப நிலையிலுள்ள, வாத நோய்களைப் போக்கவல்லது[5][6].
அகத்தியர் குணபாடம்[தொகு]
சீரகச்சம் பாவரிசி தின்னச் சுவையாகும்
பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் – வாருலகில்
உண்டவுட னேபசியும் உண்டாகும் பொய்யலவே
வண்டருறை பூங்குழலே ! வாழ்த்து.
மேற்கூறிய பாடலின் பொருளானது, ”இனிப்புள்ள சீரகச்சம்பா அரிசியை உண்பவர்களுக்கு, மீண்டும் உண்பதற்குள் பசியைத் தூண்டும் வளிநோய்களைப் போக்கும்” என்பதாகும்.[7]
இவற்றையும் காண்க[தொகு]
- நெல்
- பாரம்பரிய நெல்
- இலங்கையின் பாரம்பரிய அரிசி
- இயற்கை வேளாண்மை
- வேளாண்மை
- சம்பா (அரிசி)
- சம்பா மாவட்டம் (தொடர்பற்றக் கட்டுரை)
சான்றுகள்[தொகு]
- ↑ Seeraga Samba - Crop Duration
- ↑ சீரகச் சம்பாவின் தமிழ் அர்த்தம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
- ↑ "இயற்கையாகவே உடல் எடையை குறைக்க". 2020-09-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-01-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "அரிசியின் மருத்துவ குணங்கள்". 2015-08-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-01-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி". 2016-04-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-01-06 அன்று பார்க்கப்பட்டது.