குண்டுச்சம்பா (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குண்டுச்சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
தோற்றம்
பண்டைய நெல் இரகம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

குண்டுச்சம்பா (Gundu Samba) அல்லது, வட்டார வழமையில் மிளகி (Milagi)[1] எனப்படும் இந்த நெல் வகை, தமிழகத்தின் ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.[2]

மருத்துவ குணம்[தொகு]

குண்டு சம்பாவின் அரிசி உணவு சாப்பிடுவதால், நாவறட்சியைப் போக்கும். ஆனாலும் இதன் கரப்பான் எனும் பிணியை உண்டாக்குவதோடு, பசியை மந்திக்கச் செய்வதாகவும் கூறப்படுகிறது.[3]

அகத்தியர் குணபாடம்[தொகு]

குண்டுச்சம் பாவரிசி கொண்டுண்ணும் பேர்களுக்குப்
பண்டையில்லா மந்தநோய் பாரிக்கும் – அண்டுபடாத்
தாகமெல் லாமொழியும் தையலே ! வன்கரப்பான்
தேகமெல் லாம்பரவுஞ் செப்பு.

  • பொருள்: மேற்கூறிய பாடலின் பொருளானது, இந்த குண்டுச்சம்பா அரிசியை உண்டவனுக்கு இதனால் பசித்தீ கெடும். கரப்பான் உண்டாகும். நீர்வேட்கை போகும். என கூறப்படுகிறது.[4]

தொன்மை குறிப்பு[தொகு]

குதிரைகட்டி ஐலேலப்படி சேர்க்குழச்சு

குண்டுச்சம்பா ஐலேலப்படி நாத்துநட்டு

ஐலேலப்படி நாத்துநட்டோ ஆளுகளே

ஐலேலப்படி கூப்பிடுங்க பிரியமின்னா...
  • மேற்கூறிய இப்பாடல் அக்காலப் பெண்கள் நாற்று நடும் வேளையில், களைப்பாற பாடுவதை வழமையாகக் கொண்டிருந்தனர் என்பது மூலாதாரத்தில் உள்ளது.[5]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டுச்சம்பா_(நெல்)&oldid=3240649" இருந்து மீள்விக்கப்பட்டது