கள்ளிமடையான் (நெல்)
கள்ளிமடையான் |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
170 - 180 நாட்கள் |
மகசூல் |
சுமார் 2000 கிலோ ஒரு ஏக்கர் |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
கள்ளிமடையான் ( Kallimadaiyan) எனப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் இரகமாகும். தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ‘ஐயர்பாளையம்’ எனும் வட்டாரங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படும் இது, ஒரு ஏக்கருக்கு சுமார் 2 டன்கள் மகசூல் கொடுக்கக்கூடியதாகும்.[1]
கால அளவு
[தொகு]நீண்டகால நெற்பயிரான இது, சுமார் ஆறுமாத காலத்தின் முடிவில் அறுவடைக்கு வரக்கூடிய நெல் இரகமாகும். மேலும் இதன் நாற்றாங்கால் கால அளவு மட்டுமே, சுமார் 35 நாட்கள் முதல், 60 நாட்கள் ஆகும்.[1]
பருவகாலம்
[தொகு]சுமார் 140 - 200 நாட்கள் மொத்தப் பயிர்க்கால அளவுடைய இதன் நெற்பயிர்கள், நீண்டகால நெற்பயிர்கள் சாகுபடி செய்யக்கூடிய ஆகத்து மாதம் தொடங்கும் சம்பாப் பருவம் ஏற்றதாக கூறப்படுகிறது. மேலும் இப்பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.[2]
வளருகை
[தொகு]சுமார் 110 - 120 சென்டிமீட்டர் உயரம் வரையில் வளரும் தன்மையுடைய இந்த நெற்பயிர், மிகச்சிறந்த தூர் (நெற்கதிர்) எடுக்கும் இயல்பு கொண்டது. மேலும் இதன் பூங்கொத்துகள் சுமார் 30 சென்டிமீட்டர் வரை நீண்டு, தடித்த தானியமணிகளை உருவாக்கி அதிக மகசூலை பெற்றுத்தருவதாக கருதப்படுகிறது. வெண்ணிற நெல்மணிகளை கொண்டுள்ள கள்ளிமடையான், கதிர் நாவாய்ப்பூச்சி (Bug), தண்டு துளைப்பான் பூச்சிகள் மற்றும் குலைநோய் போன்றவைகளை எதிர்க்கும் ஆற்றல்களை உடையதாகும்.[1]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Traditional Varieties grown in Tamil nadu - Kallimadayaan". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-01-28.
- ↑ பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]