கெட்டி உருண்டை (இனிப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெட்டி உருண்டை (கல்லுருண்டை) என்பது விழாக்காலங்களில் செய்யப்படும் தமிழகத்து இனிப்பு. இது பச்சரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை மாவாக அரைத்து இனிப்பு சேர்த்து செய்யப்படும். தேவைக்கேற்ப எள்ளோ, தேங்காயோ சேர்த்து செய்தும் உண்பர். கெட்டியாக பிடிக்கப்படுவதால் கடிப்பதற்குக் கடினமாக இருக்கும். எனவே இப்பெயர் பெற்றது. தோற்றத்தால் நெய் சேர்த்து செய்யப்படும் ரவா உருண்டையை ஒத்திருக்கும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கெட்டி_உருண்டை_(இனிப்பு)&oldid=1663590" இலிருந்து மீள்விக்கப்பட்டது