எரிபந்த நோய்
மக்னிபொத்தோ கிறைசியா | |
---|---|
A conidium and conidiogenous cell of M. grisea | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | M. grisea
|
இருசொற் பெயரீடு | |
Magneporthe grisea (T.T. Hebert) M.E. Barr | |
வேறு பெயர்கள் | |
Ceratosphaeria grisea T.T. Hebert, (1971) |
எரிபந்த நோய் (blast disease) எனப்படுவது நெல்லின் எல்லா வளர்ச்சிப் படிநிலைகளிலும் தாக்கும் ஒரு நோய் ஆகும். நோய்க்காரணி மக்னிபொத்தோ கிறைசியா (Magneporthe grisea) எனும் பூஞ்சணம்.
அறிகுறிகள்
[தொகு]ஆரம்ப நிலையில் இலை ஊதா கலந்த பச்சை நிறத்தில் தோன்றிபின் நீல வடிவில் தோன்றும்.நோய் வளர்ச்சியடைந்த நிலையில் புள்ளிகள் வெண்மை கலந்த சாம்பல் நிறமையப் பகுதியையும் பளுப்பு நிற ஓரங்களையும் கொண்டு கண் வடிவில் காணப்படும். நிலமட்டத்திற்கு மேலுள்ள பகுதிகளில் அறிகுறிகள் தென்படும். இலை மடலிலும் கணுக்களிலும் தாக்க அறிகுறிகள் தோன்றலாம்.
நோய் பரவும் முறை
[தொகு]- காற்றின் மூலம்
- பாதிக்கப்பட்ட விதைகள் மூலம்
- வயலிலுள்ள களைகள் மூலம்
கட்டுப்பாட்டு முறைகள்
[தொகு]- நோயற்ற பயிரிலிருந்து விதை தெரிதல்
- வயல் மற்றும் வரப்பிலுள்ள களைகளை அகற்றுதல்
- நோய் எதிர்ப்பு திறனுள்ள வருக்கங்களைப் பயிரிடல்
- பரிந்துரைக்கப்பட்ட இரசாயனங்களை பாவித்தல்
- சூடோமோனசுத் தூள் 10 கிராம் ஒரு கிலோகிராம் விதைக்கு 400 மில்லி லீட்டர் நீரில் கலந்து
- திராம் அல்லது பெனோமைல் 2 கிராம் ஒரு கிலோகிராம் விதைக்கு
பூசண நோய்வகைகள்
[தொகு]பூசண நோய்கள் பலவகைப்படும்.[1][2]
குலை நோய்
[தொகு]பைரிக்குலேரியா ஓரைசே என்னும் பூசணத்தால் இந்நோய் உண்டாகிறது. நாற்றங்காலிலும், நட்ட பயிரிலும் காணப்படும் நோயாகும். தொடக்கத்தில் நாற்றங்காலில் இலைகளில் சிறு சிறு பூச்சிகள் தோன்றுகின்றன. நாளடைவில் இப்புள்ளிகள் பெரியவையாகக் கண் வடிவத்துடன் காணப்படுகின்றன. புள்ளிகளின் ஓரங்கள் கருஞ்சிவப்பு நிறமாகவும், நடுப்பகுதி சாம்பல் நிறமாகவும் இருக்கும். இவை முழுவதும் பரவி தோகையைக் கருகச் செய்கின்றன. நாற்றில் தோன்றும் இவ்வறிகுறிகளை நட்ட பயிரிலும் காணலாம். நட்ட பயிர்களில் கணுக்கள் கருமைநிறம் அடையும். தாக்கப்பட்ட கணுக்கள் உடைந்துவிடும். கதிர்கள் வெளிவரும் சமயத்தில் கதிர்களின் கழுத்துப் பகுதி கருமைநிறம் பெற்று ஒடிந்துவிடும். இந்நோயைக் கட்டுப்படுத்த ஹெக்டர் ஒன்றுக்கு எடிபென்பாஸ் 500 மி.லி, கார்பென்டாசிம் 250 கி, மேன்கோசெப் 1000 கி ஆகியவற்றில் ஒன்றைப் பயிரில் தெளிக்க வேண்டும்.
செம்புள்ளி நோய்
[தொகு]இந்நோய்க்கு ஹெல்மிந்தோஸ் பொரியம் ஒரைசே என்னும் பூசணமே காரணமாகும். நோயுற்ற இலை, இலையுறை ஆகியவற்றின் மேல் செம்புள்ளிகள் வட்டமாகவோ, நீள்வட்டமாகவோ தோன்றும். நோய் கடுமையாகும்போது இப்புள்ளிகள் ஒன்றுசேர்ந்து தாக்குதலுற்ற பகுதியைக் காய்ந்துவிடச் செய்கின்றன. நெல்மணிகளின் மேல் கரும்பச்சை நிறத்தில் பூசண வளர்ச்சி காணப்படும். கதிரின் கழுத்துப்பகுதி தாக்கப்பட்டுப் பழுப்பு நிறத்தில் பூசண வளர்ச்சி காணப்படும். இந்நோயை கட்டுப்படுத்த 1 கி.கி விதைக்கு 4 கி.கி அல்லது 4 கி கேப்டான் வீதம் விதை நேர்த்தி செய்த பின் நாற்றுப் பாவ வேண்டும்.
தூர் அழுகல்
[தொகு]பியூசேரியம் மொனிலிபார்மே என்னும் பூசணத்தால் இந்நோய் தோன்றுகிறது. இதனால் நாற்றங்காலில் நாற்றுகள் நீண்டு மெலிந்து, வெளிறியோ மஞ்சளாகியோ காய்ந்து விடும். நட்ட பயிரில் செடி நெட்டையாக வளர்ந்து மெலிந்து கணுக்களில் சல்லி வேர்களைப் பெற்றிருக்கும். இந்நோயைக் கட்டுப்படுத்த விதைக்கும்முன் 1 கி.கி விதைக்கு 4 கி.கி அல்லது கேப்டான் மருந்தை விதை நேர்த்தி செய்த பின் நாற்றுப் பாவ வேண்டும்.
தண்டழுகல்
[தொகு]இந்நோயை உண்டாக்கும் பூசணம் ஸ்கிளீரோசியம் ஒரைசே. இந்நோயின் காரணமாக நீர்மட்டத்தை ஒட்டிய இலையுறையில் நீண்ட கரும்புள்ளிகள் தோன்றும். இவை தண்டிற்கும் பரவித் தண்டை அழித்து விடுகின்றன. இலைகள் காய்ந்து தண்டு சாய்ந்து விடும். பிளந்த தண்டைக் கூர்ந்து நோக்கினால் கடுகு போன்ற கருநிற இழைமுடிச்சுகள் காணப்படும். இந்நோயைக் கட்டுப்படுத்த நடவு வயலில் நீரை வடித்துவிட்டு கார்பென்டாசிம் 0.1% மருந்தைச் செடிகளின் தூர்களில் ஊற்ற வேண்டும்.
இலையுறை அழுகல்
[தொகு]கார்ட்டிசியம் சசாகி என்னும் பூசணம் இந்நோய்க் காரணியாகும். இந்நோயின்போது நீர்மட்டத்தை ஒட்டிய இலையுறைப் பகுதியில் வட்டமான சாம்பல் நிறப் புள்ளிகள் தோன்றிப் பரவி இலையுறையை அழுகச் செய்யும். இதனைக் கட்டுப்படுத்த நிலத்தில் தேங்கியிருக்கும் நீரை நன்றாக வடித்துவிட்டுக் கார்பென்டாசிம் 0.1%, பிரசிக்கால் 0.1% ஆகியவற்றில் ஒன்றைச் செடிகளின் தூர்களில் ஊற்ற வேண்டும்.
கதிர் உறை அழுகல்
[தொகு]அக்ரோசிலின்டிரியம் ஒரைசே அல்லது சாரகிளேடியம் ஒரைசே என்னும் பூசணத்தால் இந்நோய் உண்டாகிறது. கதிர் உறைகளில் பெரிய பழுப்புநிறப் புள்ளிகள் தோன்றும். நாளடைவில் தாக்குதலுக்குட்பட்ட பகுதிகள் அழுகிக் காய்ந்து விடும். பாதிக்கப்பட்ட பயிரிலிருந்து கதிர்கள் வெளிவருவதில்லை. இந்நோயைக் கட்டுப்படுத்த நடவு வயலில் ஹெக்டேர் ஒன்றுக்கு கார்பென்டாசிம் 250 கி, எபெண்பாஸ் 500 மி, கேப்டபால் 600 கி ஆகியவற்றில் ஒன்றைக் கதிர் வெளிவருவதற்கு முன்னாள் ஒருமுறையும் 15 நாள் இடைவெளியில் மற்றொரு முறையும் தெளிக்க வேண்டும்.