பசுந்தாள் உரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பசுந்தாள் உரம் இயற்கை வேளாண்மையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நைட்ரஜன் போன்ற மூலப்பொருள், சேதனப் பொருட்களை நிலஊட்டல் மூலம் மண்ணிற்கு வழங்குவதற்கு இம்முறை உதவுகிறது. செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் உண்டாகும் நீர், மண் மாசுபாடு இம்முறையால் தடுக்கப்படுகிறது.

பொதுவாக அவரை இனத் தாவரங்கள் இவ்வகையான பசுந்தாள் உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவரையினத் தாவரங்களின் வேர்களில் உள்ள கணுக்களில் Rhizobia பாக்டீரியாவின் உதவியுடன் நைதரசன் நிலைப்படுத்தல் நிகழ்வதனால், அவை நைதரசன் செறிவான தாவரங்களாக இருக்கின்றன. எனவே இவை மீண்டும் மண்ணில் சேர்க்கப்படும்போது, பயிர்களுக்கு அத்தியாவசியமான தாதுப்பொருளான நைதரசன் மண்ணில் சேர்க்கப்பட்டு மண்ணின் வளம் கூடுகின்றது.

கொழுஞ்சி, சணப்பை, எருக்கு, புங்கம், நுணா, வேம்பு, பூசரவு மற்றும் ஆடாதொடா ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் பசுந்தாள் உரங்கள் ஆகும். இவற்றுள் கொழுஞ்சி, சணப்பை போன்ற செடிகள் வேளாண் நிலத்தில் பயிரிடப்பட்டு, அவை வளர்ந்து பூக்கும் முன்னரே அப்படியே உழுது நிலத்துடன் சேர்க்கப்படுகின்றன. நிலத்தில் இந்த பருவத்தில் பசுந்தாள் உரம் இடுவது அடுத்த பருவத்தின் விளைச்சலில் முன்னேற்றம் தரும் என்று நம்பப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுந்தாள்_உரம்&oldid=1525749" இருந்து மீள்விக்கப்பட்டது